மீண்டும் ஒரு கவர்ச்சி நடனம்..! தமன்னாவின் பாடல் விடியோ!
நடிகை தமன்னாவின் புதிய விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
ரெய்டு 2 படத்தில் நடிகை தமன்னா நடனத்தில் புதிய பாடல் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷ், கார்த்தி, சூர்யா, விஜய், அஜித் என முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
ரஜினியுடன் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடி ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய புரமோஷனாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் ஹிந்தியில் அவரது நடனதுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
உதாரணமாக ஹிந்தியில் ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.
இந்தப் பாடல் யூடியூப்பில் மட்டும் 555 மில்லியன் (55.5 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒடேலா 2, ரெய்டு 2 படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில், ராஜ்குமார் குப்தா இயக்கியுள்ள ரெய்டு 2 படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
அஜய் தேவ்கன் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே.1ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.