முகப்பு
செய்திகள்

எஸ்.வி. சேகர் யாரென்றே தெரியாது! அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஷோபனா கருத்து!

மீனாட்சி சுந்தரம் தொடரில் எஸ்.வி. சேகருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து நடிகை ஷோபனா கருத்து...

Updated On : 22 ஏப்ரல், 2025 at 3:48 PM
மீனாட்சி சுந்தரம் தொடரில் ஷோபனா - இன்ஸ்டாகிராம்
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2025 at 3:35 PM

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மீனாட்சி சுந்தரம் தொடரில் எஸ்.வி. சேகருக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்கிறார்.

76 வயதான எஸ்.வி. சேகருக்கு 26 வயது நடிகை ஜோடியாக நடிப்பதா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பிவந்த நிலையில், மீனாட்சி சுந்தரம் தொடரின் முன்னோட்டக் காட்சியைக் கண்டு பலரும் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டனர்.

மனைவியை இழந்த சுந்தரம் என்ற முதியவர், மகன், மருமகள், பேரன் என பலர் இருந்தும் தனக்காக ஒரு துணையைத் தேடிக்கொள்கிறார். கணவனை இழந்து திருமண வயதில் பெண் இருக்கும் மீனாட்சி என்ற பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக்கொள்கிறார் எஸ்.வி. சேகர்.

Advertisement

பலரைக் கவரும் வகையில் இந்த முன்னோட்டம் இருந்ததால், தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஷோபனா - இன்ஸ்டாகிராம்
Updated On : 22 ஏப்ரல், 2025 at 4:23 PM

இதனிடையே எஸ்.வி. சேகருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து நடிகை ஷோபனா மனம்திறந்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'எஸ்.வி. சேகர் முதலில் யார் என்றே தெரியாது. ஜீன்ஸ் படத்தில் நடித்திருப்பாரே அவரா? என்றுதான் நினைவுபடுத்திக்கொண்டேன். எஸ்.வி. சேகர் என்றால் என் பாட்டிக்கு மிகவும் பிடிக்குமாம். நான் என் பாட்டியைப் பார்த்தது இல்லை. அதனால் அவரைப் பார்க்கும்போதெல்லாம் என் பாட்டி எனக்கு நினைவுக்கு வருவார். இதனால் அவரை நான் ஒரு ஏஞ்சல் போலவே பார்க்க ஆரம்பித்துவிட்டேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஷோபனா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தழகு தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பூங்காற்று திரும்புமா என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Updated On : 22 ஏப்ரல், 2025 at 4:23 PM

மீண்டும் சின்ன திரையில்...

நாடகக் கலைஞரான எஸ்.வி.சேகர், நினைத்தாலே இனிக்கும் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, வறுமையின் நிறம் சிவப்பு, குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, கோபுரங்கள் சாய்வதில்லை ஆகிய பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் அரசியலில் நேரடியாக ஈடுபட்டுவந்த எஸ்.வி. சேகர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார்.

மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடிகை ஷோபனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதையும் படிக்க | செல்லமே அல்ல, தங்க மீன்கள்: பெயர் மாற்றப்பட்ட ரேஷ்மாவின் சீரியல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.