அக்யூஸ்ட் படத்தின் டீசர்!
யோகி பாபு, அஜ்மல் நடித்துள்ள அக்யூஸ்ட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் யோகி பாபு, அஜ்மல் நடித்துள்ள அக்யூஸ்ட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கன்னட இயக்குநரான பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அக்யூஸ்ட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, அஜ்மல், உதயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஜீஷன் ஸ்டூடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன்ஸ், மிய் ஸ்டூடியோஸ் ஆகியவை இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
Advertisement
Advertisement
’கோ’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான அஜ்மல் கடைசியாக தமிழில் விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார்.
வெற்றிப் படங்கள் அமையாததால் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், விரைவில் திரையரங்குகளில் வெளியாகுமென்று மட்டுமே டீசரில் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.