டிரெண்டிங் போஸ்டர் 
செய்திகள்

டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கலையரசன் நடிப்பில் வெளியான டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் படத்தில் அன்பு என்ற பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமான கலையரசன், குறிப்பிடத்தக்க பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கலையரசன் நாயகனாகவும் நடித்து வருகிறார். ராம் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள டிரெண்டிங் படத்தில் கலையரசன் நாயகனாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவராஜ். என் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரும் ஜூலை 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், டிரெண்டிங் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (ஆக. 8) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினியின் முதல் திரைப்படம் - 50வது ஆண்டு கூலி வரை வெளியிடும் ஒரே திரையரங்கம்!

விஜய் டிவியில் ஆக. 11 முதல் புதிய நேரத்தில் தொடர்கள்!

மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய வாகனஓட்டிகள்! | Uttarakhand

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

மராத்திய இளவரசி... ரிங்கு ராஜ்குரு!

SCROLL FOR NEXT