முகப்பு
செய்திகள்

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

ஜெயிலர் - 2 குறித்து...

Updated On : 21 ஆகஸ்ட் 2025, 12:36 pm IST
பகிர்:

நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஜெயிலர் - 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுராஜ் தமிழில் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது, ரஜினிகாந்துடனும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

actor suraj venjaramoodu acts in jailer 2 movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments