ஹார்ட் பீட் நடிகர்கள் நடிக்கும் புதிய இணையத் தொடர்!
ஹார்ட் பீட் நடிகர்கள் நடிக்கும் புதிய இணையத் தொடர் குறித்து...
ஹார்ட் பீட் இணையத் தொடர் நடிகர்கள் நடிக்கும் புதிய இணையத் தொடர் உருவாகியுள்ளது.
ஹார் பீட் இணையத் தொடரில் நடித்து பிரபலமானவர்கள் பாடினி குமார், குரு லட்சுமணன். இவர்கள் ஹார்ட் பீட் தொடரில் இணைந்து நடித்து தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினர்கள்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் குரு லட்சுமணன் ஆஃபீஸ் இணையத் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப் பெற்றது.
Advertisement
Advertisement
தற்போது இவர் ஆஹா ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் என்ற இணையத் தொடரில் நடித்து வருகிறார்.
அதேபோல், சின்ன திரையில் ஒளிபரப்பான நாயகி, திருமணம் தொடர்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் பாடினி குமார். தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் டேக் டைவெர்ஷன், சீசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் குரு லட்சுமணன் மற்றும் பாடினி குமார் ஆகியோர் இணைந்து புதிய இணையத் தொடரில் நடிக்கிறார்கள். இந்தத் தொடருக்கு ஹார்டிலே பேட்டரி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஹார்ட்ல பேட்டரி இணையத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்குகிறார். இந்த இணையத் தொடர் வரும் டிச. 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
இதையும் படிக்க: திரைப்படமாகும் உலக கேரம் சாம்பியன் வாழ்க்கை!
A new web series featuring the actors from the web series 'Heart Beat' has been created.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.