தமன் 
செய்திகள்

தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்

தமிழ், தெலுங்கு சினிமா குறித்து தமன்...

இணையதளச் செய்திப் பிரிவு

இசையமைப்பாளர் தமன் தமிழ், தெலுங்கு திரைத்துறை குறித்து பேசியுள்ளார்.

தென்னிதியளவில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் தமன். தற்போது, அதிக தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பில் வெளியான ஓஜி திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. அகண்டா - 2 படமும் வசூல் செய்து வருகிறது.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் வாரிசு திரைப்படத்துக்கு இசையமைத்து நல்ல பாடல்களைக் கொடுத்தார். தற்போது, விஜய் மகன் ஜேசன் இயக்கிவரும், ‘சிக்மா’ படத்திற்கும் இதயம் முரளி படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தமன், “இங்கு (தெலுங்கு) பிறமொழி இசையமைப்பாளர்கள் பலரும் பணத்திற்காக இசையமைக்க வருகிறார்கள். பல தயாரிப்பாளர்கள் அதற்கு வரவேற்பு அளிக்கின்றனர். ஆனால், தமிழில் அப்படியில்லை. அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவ்வளவு எளிதாக பிறமொழி இசையமைப்பாளர்களைப் பயன்படுத்த மாட்டார்கள்.

அனிருத்துக்கு எளிதாக தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், எனக்கு தமிழ் சினிமாவில் அப்படி கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவிலிருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை. இது குறையாவகே தெரிகிறது” எனக் கூறினார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் அண்மை காலமாக நிறைய தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

musician thaman spokes about tamil and telugu movie industries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவு தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற அழைப்பு

சண்முகக் கவசம் பாராயணம்

அடிப்படை வசதி: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு! எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

SCROLL FOR NEXT