பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறக்கூடிய போட்டியாளர்கள் பட்டியல்!
இந்த வாரம் வெளியேறக்கூடிய போட்டியாளர்கள் பட்டியல் குறித்து....
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறக்கூடிய போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான போட்டி(Ticket To Final) நடைபெறவுள்ளதால், போட்டியாளர்கள் ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர்.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா, எஃப்ஜே, ஆதிரை, கனி திரு, அமித் பார்கவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தற்போது, பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரத்திற்கு நாமினேஷன் இன்று(டிச. 29) நடைபெற்றது.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு கானா வினோத், அரோரா, திவ்யா கணேஷ், சுபிக்ஷா, சபரிநாதன், கமருதீன், பார்வதி, சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களிப்பார்கள், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர், இந்த வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவார்.
இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேபோல, நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான டிக்கெட்டை(Ticket To Final), யார் பெறுவார் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
The list of contestants who are likely to be eliminated this week in Bigg Boss 9 has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.