முகப்பு
செய்திகள்

‘தம்பிக்காக...’ ஹரிஷ் கல்யாண் படத்தில் பாடிய சிம்பு!

டீசல் படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்...

Updated On : 17 பிப்ரவரி, 2025 at 1:32 PM
பகிர்:

ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

பார்க்கிங், லப்பர் பந்து படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த படம் டீசல். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தினை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும் வினய், கருணாஸ் மற்றும் அனன்யா முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாவது பாடலின் புரமோவை வெளியிட்டுள்ளனர். ’தில்லுபாரு ஆஜா’ என்கிற இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இதன் புரமோவில் நடிகர் சிம்பு, “தம்பி ஹரிஷ் கல்யாணுக்காக இப்பாடலை பாடியுள்ளேன்” என்றார்.

இந்தப் பாடல் நாளை (பிப். 18) மாலை 4.50 மணிக்கு வெளியாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →