முகப்பு
செய்திகள்

ஒரே நாளில் வெளியாகும் வீர தீர சூரன், ஜீனி?

வீர தீர சூரன், ஜீனி வெளியீடு குறித்து...

Updated On : 20 ஜனவரி 2025, 1:15 pm IST
பகிர்:

நடிகர்கள் விக்ரம், ரவி மோகனின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரம் தங்கலான் வெற்றிக்குப் பின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவான இது மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது.

அதேபோல், நடிகர் ஜெயம் ரவி நடித்த ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற மார்ச். 28 ஆம் தேதி திரைக்கு வருவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments