டிரெண்டிங் பட டிரைலர் காட்சிகள். படங்கள்: யூடியூப் / சரிகம தமிழ்.
செய்திகள்

முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!

நடிகர் கலையரசன் நடித்துள்ள டிரெண்டிங் படத்தின் டிரைலர்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கலையரசன் நடித்துள்ள டிரெண்டிங் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

மெட்ராஸ் படத்தில் அன்பு எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமான கலையரசன் குறிப்பிடத்தக்க பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கலையரசன் கதா நாயகனாகவும் அசத்தி வருகிறார். ராம் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள டிரெண்டிங் படத்தில் கலையரசன் நாயகனாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவராஜ் என் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலரை இயக்குநர் பா. இரஞ்சித் வெளியிட்டார்.

இந்தப் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

யூடியூப் டிரெண்டிங்கை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

’ஆண்கள் ஆடையைக் கழற்றினால் யார் பார்ப்பார்கள்?, முகம், அடையாளம் இல்லையெனில் அவருமே பெர்வர்ட்தான் (வக்கிரமானவர்கள்தான்)... ’ என டிரைலரில் வரும் வசனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

இந்தப் படம் வரும் ஜூலை 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

The trailer of the trending film starring actor Kalaiyarasan has been released and is attracting attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT