டிடி நெக்ஸ்ட் லெவல்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படம் கடந்த மே 16 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பிரேம் ஆனந்த இயக்கிய இப்படத்தில் சந்தானம், கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.