செய்திகள்

சின்னஞ்சிறு கிளியே: எதிர்நீச்சல் தொடர் பாணியில் புதிய தொடர்!

எதிர்நீச்சல் தொடர் பாணியில் உருவாகியுள்ள புதிய தொடர் குறித்து...

DIN

நடிகை ஸ்வாதிகா நடிக்கும் புதிய தொடரின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நரேஷ், சையத், புனிதா, அபிதா, மதுமிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த புதிய தொடரில் ஸ்வாதிகா பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இத்தொடருக்கு சின்னஞ்சிறு கிளியே எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆணாதிக்கம் கொண்டவர்கள் உள்ள குடும்பத்துக்கு வாழச் செல்லும் நாயகி அங்கு எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.

இத்தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் கதைபோல உள்ளதாக முன்னோட்ட விடியோவை வைத்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சின்னஞ்சிறு கிளியே தொடரின் ஒளிபரப்பு தேதி, ஒளிபரப்பு நேரம் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படிகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜெய் எஸ்.கே. நாயகனாகவும், ஸ்வேதா நாயகியாகவும் நடிக்கும் வாரிசு என்ற புதிய தொடர் ஜூன் 30 ஆம் தேதி முதல் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

புதிய தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளதால் பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஹார்ட் பீட் - 2 வெப் தொடரில் மோதலும் காதலும் நடிகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானவில்லின் அழகு - பிரீத்தி முகுந்தன்

மேகம் போல கலையும் உடல்

2-வது டெஸ்ட்: ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள்!

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது: மமதா சர்ச்சைப் பேச்சு!

கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகளின் கதி?

SCROLL FOR NEXT