‘பீனிக்ஸ்’ பட டிரைலர்  
செய்திகள்

வெளியானது ‘பீனிக்ஸ்’ பட டிரைலர்

விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ளார்.

இது அவர் இயக்கும் முதல் படம். படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வரும் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இப்படம் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகிறது.

இந்த நிலையில் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

summary

The trailer of the film 'Phoenix', starring Vijay Sethupathi's son, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி காட்டு யானை பலி!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT