முகப்பு
செய்திகள்

யோகிபாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ஓடிடி தேதி தொடர்பாக...

Updated On : 4 மார்ச் 2025, 11:36 am IST
பகிர்:

யோகிபாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சகுனி படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சங்கர் தயாளுவின் குழந்தை முன்னேற்றக் கழகம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக சங்கர் தயாளுவின் மகன் அத்வைத், ஹரிகா படேடா, இமயவர்மன், மாஸ்டர் பவாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யோகி பாபு, செந்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்துள்ள இந்தப் படத்தில் அகல்யா, லிஸி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், கோவிந்த மூர்த்தி, சரவணன், சுப்பு பஞ்சு நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

அரசியல்வாதியாக ஆசைப்படும் குழந்தையையும், குழந்தைகளின் உலகில் அரசியல் குறித்த பார்வையையும் மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த ஜன. 24-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments