முகப்பு
செய்திகள்

எம்புரான்: முதல்முறையாக ஐமேக்ஸில் வெளியாகும் மலையாளத் திரைப்படம்!

நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகிறது.

Updated On : 18 மார்ச் 2025, 8:09 pm IST
எம்புரான் திரைப்பட போஸ்டர். - படம்: இன்ஸ்டா / மோகன்லால்.
பகிர்:

நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம்தான் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.சிறப்பு வாய்ந்த

Advertisement

Advertisement

எம்புரான் திட்டமிட்டபடி மார்ச் 27 அன்று திரைக்கு வருமென இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். மோகன்லால் நடித்த படங்களிலேயே இதுவே மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐமேக்ஸில் வெளியாவது குறித்து மோகன்லால் கூறியதாவது:

ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளப் படமாக எம்புரான் இருப்பது மிகப்பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது.

ஐமேக்ஸுக்கும் மலையாள சினிமாவுக்கும் உள்ள தொடர்பு இதன்மூலம் நீண்ட, சிறப்பு வாய்ந்த தொடர்பாக நீடிக்குமென நம்புகிறேன்.

இந்தப் படத்தை மார்ச்.27முதல் உலகம் முழுவதும் ஐமேக்ஸில் கண்டு களியுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments