முகப்பு
செய்திகள்

100-ஆவது நாளில் மார்கோ! சிறப்பு போஸ்டர்!

உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படத்தின் 100-ஆவது நாள் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 29 மார்ச் 2025, 4:05 pm IST
100-ஆவது நாளில் மார்கோ போஸ்டர். - படம்: எக்ஸ் / உன்னி முகுந்தன்
பகிர்:

உன்னி முகுந்தன் நடித்த மார்கோ 100-ஆவது நாள் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது.

அதிக வன்முறைக் காட்சிகள் கொண்ட ஆக்சன் படமான இது கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் உலகளவில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

Advertisement

Advertisement

இந்தப் படம் தற்போது 100ஆவது நாளை கடந்துள்ளது. அதற்காக சிறப்புப் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது உன்னி முகுந்தனின் 2ஆவது ரூ. 100 கோடி திரைப்படமாகும். மேலும், நூறு கோடி வசூலித்த மலையாள சினிமாவின் பட்டியலில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது.

இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிப்.13ஆம் தேதி வெளியாகியது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உன்னி முகுந்தன் கூறியதாவது:

வரலாற்றில் இடம்பிடித்த மார்கோ

100 நாள்களில் திரையரங்குகளில் ஓடி ரூ.100க்கும் அதிகமான கோடியை வசூலித்துள்ளது.

திரையில்: த்ரிசூர் தேவி திரையரங்கில் பார்க்கலாம்

ஓடிடியில்: சோனி லைவ், அமேசான் பிரைம் (ஹிந்தி), ஆஹா (தெலுங்கு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments