சிலம்பரசன் மற்றும் விராட் கோலி 
செய்திகள்

எஸ்டிஆர் - விராட்! இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?

சிலம்பரசன் மற்றும் விராட் கோலி குறித்து...

DIN

நடிகர் சிலம்பரசன் மற்றும் விராட் கோலி கூட்டணி சேர்வது குறித்து ரசிகர்களிடம் ஆர்வம் எழுந்துள்ளது.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, நடிகர் சிலம்பரசன் நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்ற, “நீ சிங்கம் தான்” பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறினார். இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, இப்பாடல் பல கிரிக்கெட் ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள விடியோக்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விராட் கோலியின் விடியோவைக் கவனித்த சிலம்பரசன், “நீயே ஒரு சிங்கம்தான்” எனக் கூறும் விதமாக, “நீ சிங்கம் தான்” என விராட்டை புகழ்ந்தார். இதனால், இருவரின் ரசிகர்களும், தங்களின் ஆளுமைகள் ஒற்றுமையுடன் இருப்பதை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தக் கதை இங்கு முடியவில்லை.

சிம்பு மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது தனித்துவ தாடி (beard) தோற்றங்களுக்கு பிரபலமானவர்கள். சிலம்பரசன் தற்போது கச்சிதமான உடற்கட்டுடன் உள்ள நிலையில், பல வகைகளில் அவர் விராட் கோலியைப் போலவே தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதனால், விராட் கோலியின் பயோபிக் கதையில் சிலம்பரசன் நடித்தால் எப்படியிருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த இருவரில் ஒருவர் ஐபிஎல் பட்டியலில் உச்சத்தில் இருக்கிறார், மற்றொருவர் தக் லைஃப், எஸ்டிஆர் - 49, எஸ்டிஆர் - 50, எஸ்டிஆர் - 51 என அடுத்தடுத்த படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், எஸ்டிஆர் உடன் விராட் கோலியின் பயோபிக் இணைந்தால், அது உண்மையிலேயே ஒரு பான்-இந்திய விருந்தாக இருக்கும் என்றே ரசிகர்கள் நினைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியோவால் வந்த வினை! ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்ணை கண்டுபிடித்த ரயில்வே!

டிட்வா புயல்: பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

SCROLL FOR NEXT