FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வடிவேலு குரலில் வெளியான மெட்ராஸ் மேட்னி பட பாடல்!

மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பாடல் குறித்து...

Updated On : 19 மே 2025, 7:48 pm IST
பகிர்:

நடிகர் வடிவேலு குரலில் மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.

இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷிணி ஹரிப்பிரியன், விஷ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது. இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.

மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் அண்மை வெளியானது. இதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிநேகன் எழுதிய ’என்னடா பொழப்பு இது’ எனும் பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விஜய் ஆண்டனியின் புதிய பட பெயர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments