நூறு சாமி வெளியீட்டில் மாற்றம்?
நூறு சாமி வெளியீடு குறித்து....
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த நூறு சாமி திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் திரைப்படத்துக்குப் பிறகு சசி - விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும் ஸ்வாசிகா நாயகியாகவும் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தின் ’மாயக் கனவோ’ என்ற முதல் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பாடகி சின்மயி மற்றும் பாடகர் கபில் கபிலன் இணைந்து பாடியது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் அதற்கான புரமோஷன் பணிகள் துவங்கப்படவில்லை. இதனால், இப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூறு சாமி டீசர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் படத்தின் வெளியீட்டிலும் ஆர்வம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.