FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதயம் முரளி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 7:13 pm IST
இதயம் முரளி போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

இதயம் முரளி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், இசையமைப்பாளர் தமன் இசையமைத்த பாடல்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது.

Advertisement

Advertisement

நடிகர்கள் அதர்வா, ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் தமனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இதயம் முரளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

summary

The OTT release date for the movie Idhayam Murali has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments