FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

எடைக் குறைப்பு அல்ல; ஆனால்... 5 மாதங்களில் உடல் அமைப்பை மாற்றிய அஞ்சனா!

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் தனது உடல் மாற்றம் பற்றி இன்ஸ்டாவில் கூறியிருக்கும் ஆச்சரியமான பதிவு குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:03 pm IST
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் உடல் மாற்றம். - படங்கள்: இன்ஸ்டா / அஞ்சனா ரங்கன்.
பகிர்:

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஐந்து மாத உழைப்பினால் தனது உடல் எடையைக் குறைக்காமல் கச்சிதமாக உடல் அமைப்பை மாற்றியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அஞ்சனா கல்லூரிப் படிப்பை முடித்ததும் 2008ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியே அவர் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கியது.

சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொழுதுபோக்குப் பிரிவில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

அஞ்சனா கடந்த 2010-ல் பாட்டு.காம், 2011-ல் பாட்டு புதுசு, 2012-ல் நம்ம ஸ்டார், 2013-ல் பாக்ஸ் ஆபிஸ், 2014-ல் கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், 2014-ல் டான்ஸ் ஜோடி டான்ஸ், 2015-ல் நீங்களும் நாங்களும், 2017-ல் ஃபிரியா விடு, 2018-ல் வாழ்த்துகள் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நடிகர் சந்திரனை கடந்த 2016ஆம் ஆண்டு அஞ்சனா திருமணம் செய்துகொண்டார். பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நாயகனாக நடித்தவர் சந்திரன்.

தொலைக்காட்சி மட்டுமின்றி தற்போது திரைப்பட நிகழ்ச்சிகளையும் அஞ்சனா தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது, தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் மூலமாக உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார். அது குறித்து அவர் இன்ஸ்டா பதிவில் கூறியிருப்பதாவது:

5 மாத இடைவெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். நான் உடல் எடையைக் குறைக்கவே இல்லை. சொல்லப்போனால், ஒன்றிரண்டு கிலோ அதிகரித்திருகிறேன். 5 அடி 7 அங்குலம் இருக்கும் எனது எடை தற்போது 67 கிலோவில் இருப்பது எனக்கு சரியாகவே இருக்கிறது.

நான் பளுத் தூக்குதலுக்குப் பிறகு, எனது எடையைக் குறைக்காமலே உடல் உறுதியானது. பெரியதாக வித்தியாசம் தெரியாவிட்டாலும் நான் வலுவாகவும், லேசாகவும், புத்துணர்வுடனும் உணர்கிறேன்.

வீட்டில் நன்றாக வேலைச் செய்கிறேன். நல்ல தோரணையுடன் இருக்கிறேன். முன்பு போல களைப்பாகவும் இருப்பதில்லை; நன்றாக உறங்குகிறேன்.

எனது பயிற்சியாளர் என்னை சிறப்பான உணவுக் கட்டுப்பாடுக்கு தள்ளவில்லை; எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. எனக்கு இனிப்பு பண்டங்கள் மீது அதிக விருப்பம் இல்லை. அதனால், காஃபியில்கூட சர்க்கரையைச் சேர்ப்பதில்லை. மற்றபடி நன்றாக சாப்பிட்டு உடற்பயிற்சி செய்கிறேன். அவ்வளவுதான்.

உடல் எடையைக் குறைப்பது எனது நோக்கமல்ல. உடல் உறுதியாக எனது பழைய ஆடைகளை அணிகிறேன். (ஆமாம், எனது டெனின் டீசர்ட் பத்தாண்டுகள் பழமையானது). அதனால், நான் சொல்ல வருவது என்னவென்றால், எடைக் குறைப்பது முக்கியமல்ல, வலுவாகவும் தன்னம்பிக்கையுடனும் உணர்வதே. பெண்கள் 30 வயதைக் கடந்ததும் தங்களது உடலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏன்னெனில், நாம் நமது சிறந்த பகுதியில் இருக்கிறோம். நாம் நமது வாழ்வின் சிறந்த ஆக்க வளம் கொண்ட, கூடுதல் பொறுப்புள்ள, அதிக ஆற்றல்கொண்ட சுற்றில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

summary

Pictures 5 months apart, feeling stronger and more confident says anchor Anjana Rangan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments