FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பியார் பிரேமா கல்யாணம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான மாப்பிள்ளை சிங்கம் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 7:10 pm IST
சான்வி மேக்னா, இளன்.
பகிர்:

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான மாப்பிள்ளை சிங்கம் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

பியார் பிரேமா காதல் மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் இயக்குநர் இளன்.

இவர், ’பியார் பிரேமா கல்யாணம்’ எனும் புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். சான்வி மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இளங்கோ குமரவேல், ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதல் பாடலான அட்ராசிட்டி சில நாள்களுக்கு முன் வெளியான நிலையில், அடுத்தப் பாடலான ‘மாப்பிள்ளை சிங்கம் ‘ இன்று வெளியானது.

இயக்குநர் இளன் எழுதிய இப்பாடலை யுவன் சங்கர் ராஜா, ரம்யா. லஷ்மி ஜெய், மதுரை சரோஜாம்மா ஆகியோர் பாடியுள்ளனர்.

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 21 அன்று தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகின்றது.

summary

Second song from the movie 'Pyaar Prema Kaadhal' released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments