FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் தேதி!

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...

Updated On : 17 ஜூலை 2026, 8:09 pm IST
மிஸ்டர் பாரத் படத்தின் புரோமோ காட்சிகள். - படங்கள்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா.
பகிர்:

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் என்ற படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

மிஸ்டர் பாரத் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இதில் யூடியூபர் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து சுதன் சுந்தரம், ஜகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளார்கள். பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.

போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், படம் வரும் அக்.1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ விடியோவும் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

லோகேஷின் தயாரிப்பில் வெளியான முதல்படம் ஃபைட் கிளப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

summary

Release date of the movie Mr Bhaarath, produced by Lokesh Kanagaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments