விஜய் சார கேட்டதா சொல்லவும்? சிட்னியில் த்ரிஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலகலப்பு!
விஜய் சார கேட்டதா சொல்லவும் என்று சிட்னியில் த்ரிஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் கோஷமெழுப்பினர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷாவிடம், விஜய் சார கேட்டதா சொல்லவும் என ரசிகர்கள் கோஷமெழுப்பியதால் அவ்விடமே கலகலப்பானது.
ஆனால், அதனை த்ரிஷா பெரிதாக கண்டுகொள்ளாமல், தமிழில் பேசுங்கள் என ரசிகர்கள் சொன்னதற்கு பதிலளிக்கத் தொடங்கி நிலைமையை சமாளித்தார்.
கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்க நடிகை த்ரிஷா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றிருந்தார்.
Advertisement
Advertisement
கடை திறப்பு விழா என்றால் ஏதோ ரிப்பன் வெட்டுவது மட்டுமல்ல, மிகப் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது இந்த நிகழ்ச்சி. சாக்லேட் பிரவுன் நிற ஆடையில், மிக எளிமையான அலங்காரத்துடன் நடிகை த்ரிஷா மெழுகு சிலைப் போல காணப்பட்டார். உண்மையில், அவரது ரசிகராக இல்லாதவர்கள்கூட, இந்த தோற்றத்தில் அவரை ரசிக்காமல் சென்றிருக்க முடியாது.
நிகழ்ச்சியில் மேடை அமைக்கப்பட்டு, ஏராளமான மக்கள் முன்னிலையில், நலினமாக ஆங்கிலத்தில் பேசிய த்ரிஷா, உலகின் பல நாடுகளுக்கும் என் வேலை நிமித்தமாக சென்றிருக்கிறேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது ஆஸ்திரேலியா. குறிப்பாக சிட்னி நகரம் ரொம்ப பிடிக்கும். இங்கிருப்பவர்கள் அனைவரும் இந்தப் பகுதியில் வாழ்பவர்களா என்று கேட்டார். அதற்கு அனைவரும் ஆம் என்று கோஷமிட்டனர்.
தொடர்ந்து பேசிய த்ரிஷா, இங்கு ஏராளமான இந்தியர்களையும், இலங்கை தமிழர்களையும் பார்க்கும்போது நான் சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வை அடைகிறேன். அதற்காக அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
அனைவரும் எனது திரைப்படங்களைப் பார்த்து ஆதரவு கொடுப்பதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் நன்றி என்று கூறினார்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் விஜய் சார கேட்டதா சொல்லுங்கள் என்று குரல் எழுப்பினர். அப்போது, தமிழில் பேசுங்கள் என்றும் சிலர் கூறினர். இரண்டுமே த்ரிஷாவுக்கு கேட்டது. ஆனால், தமிழில் பேசுங்கள் என்று கூறியவர்களை நோக்கி இங்கிருப்பவர்கள் மிக அழகாக தமிழ் பேசுகிறீர்கள், உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என்று தமிழில் பேசி பதிலளித்தார்.
சிலர் தெலுங்கு பேசுவதையும் கேட்டேன். அதனால் இந்தியர்கள் பலரும் இங்கே இருக்கலாம் என்பதால், பொதுவாக ஆங்கிலத்தில் பேசினேன் என்றும் த்ரிஷா பதிலளித்தார். த்ரிஷாவின் பேச்சுக்கு அங்கே பலத்த கரகோஷமும் விசில் சப்தமும் எழுந்தது.
convey our regards to Vijay sir – Lively moments at the event Trisha attended in Sydney!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.