ராமாயணா டிரைலர் ஒத்திவைப்பு: உலக அளவில் வெளியிடவிருக்கும் சோனி பிக்சர்ஸ்!
ராமாயணா திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு மாற்றம், புதிய விநியோகஸ்தம் குறித்து...
ராமாயணா திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோனி பிக்சர்ஸ் ஸ்டூடியோஸ் வாங்கியிருப்பதால் உலக அளவில் வேறு ஒருநாளில் வெளியிட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷ் நடித்து வருகின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோவில் மிகப் பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், கம்பீரமான ரன்பீர் தோற்றம், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் பிரைம் போகஸ் ஸ்டூடியோவின் சிஇஓவுமான நமீத் மல்ஹோத்ரா கூறியிருப்பதாவது:
நமது ராமாயாணா படத்துக்கு இன்று சிறப்பான நாள். உலகம் முழுவதும் இந்தப் படத்தை எடுத்துச்செல்லும் எனது கனவு சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் உடன் இணைந்து உண்மையாகியுள்ளது.
மற்றுமொரு நாளில் உலக அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக டிரைலர் வெளியாகும். 100 ஆண்டுக்கும் மேலான இந்திய சினிமாவில் இது மிகவும் பெருமைமிகும் தருணம். பெரிய ஹாலிவுட் படங்கள் போல நமது ராமாயணா வெளியாகவிருக்கிறது.
புத்துணர்வான பெருமை மற்றும் ஆர்வத்துடன் நமது கலாச்சாரம், கதைகளின் உயர்ந்த தரத்தை இந்த உலகம் பார்வையிடுவதற்கான கதவை திறந்துள்ளோம் என்பது சிறப்பானது. ரசிகர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
Sony Pictures Entertainment to serve as global distributor for Ranbir Kapoor's 'Ramayana'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.