FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காதலும் அதிரடியும்: ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைவிமர்சனம்

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைவிமர்சனம்...

Updated On : 30 ஜூலை 2026, 2:21 pm IST
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே
பகிர்:

இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படத்தில் ஸ்பைடர்மேனாக டாம் ஹாலண்ட்டும், அவருக்கு ஜோடியாக நடிகை ஜெண்டாயா நடித்துள்ளனர்.

மார்வெல்லின் 38வது திரைப்படமாகவும், எம்சியூவின் ஸ்பைடர்மேன் சீரியஸின் 4வது படமாகவும் வந்திருக்கிறது இத்திரைப்படம்.

ஹாலிவுட் படங்களுக்கு இருக்கும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் மார்வெல் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Advertisement

Advertisement

முந்தைய திரைப்படங்களைப் போல் தான் யார் என்பது தெரியாமல் இருக்கும் வகையில் மாஸ்க் போட்டு முகத்தை மறைத்து வாழ்ந்து வருகிறார் ஸ்பைடர்மேனான டாம் ஹாலண்ட். தன்னோட காதலியான எம்ஜே (ஜெண்டாயா), நெட் எனும் கதாபாத்திரத்தில் நண்பனாக வரும் ஜேக்கப் பேட்டலன் ஆகியோர் தன்னுடைய எதிரிகளால் எந்த பிரச்னைக்கும் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக போராடும் கதாபாத்திரமாக இருக்கிறார் (டாம்) ஸ்பைடர் மேன். இன்னொரு பக்கம் அதீத சக்திகள் கொண்ட தன்னுடைய தங்கையை டேமேஜ் கண்ட்ரோல் எனும் அரசின் பாதுகாப்புக் குழு ஆராய்ச்சி எனும் பெயரில் துன்புறுத்திக் கொன்றுவிட அவர்களை பழிவாங்கத் துடிக்கிறார் வில்லியாக வரும் சாடி சின்க். அவரது திட்டத்தை எப்படி முறியடித்தார் ஸ்பைடர் மேன் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

ரசிகர்களை திருப்திப்படுத்தி காட்சிக்கு காட்சி தீனி போட்டிருக்கிறார் இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன். அவரின் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் விதமாக ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தாங்கி நிற்கிறார் ஸ்பைடர் மேன் டாம். மற்ற கதாபாத்திரங்களை கட்டுப்படுத்தும் விதமாக வில்லி நடந்துகொள்ளும் காட்சிகளும், அது புரியாமல் ஸ்பைடர் மேன் தவிக்கும் காட்சிகளும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களை வில்லி கட்டுப்படுத்தும் இடங்களில் அவர்களைத் தாக்கவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் ஹீரோ படும் அவஸ்தைகள் என ஸ்பைடர் மேன் டாம் பயங்கரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

அவெஞ்சர்ஸ் ஹல்க்குடன் நடக்கும் சண்டைகளை தவறவிட்டுவிடவே கூடாது என்னும் வகையில் அதிரடியாக அமைக்கப்பட்டிருப்பது படத்திற்கு பெரும்பலம். ஒட்டுமொத்த படத்திற்குமான மதிப்பீட்டையே தீர்மானிக்கும் சண்டைக்காட்சியாக இது அமைந்திருக்கிறது. அதிரடிக் காட்சிகளுக்கு இணையாக இந்த முறை காதல், செண்டிமென்ட் என அவற்றையும் சிறப்பாக கொடுத்திருக்கிறது இத்திரைப்படம். காதலி தன்னை மறக்கும் இடங்களில் ஸ்பைடர் மேன் உருகுவது அற்புதம். ஜீன் கிரேவாக நடித்துள்ள நடிகை சாடி சின்க் சிறப்பாக நடித்துள்ளார். மைக்கேல் ஜியாச்சினோவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலத்தைக் கொடுத்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிரெட் பாவ்லாக்கின் கேமரா நம்மை காட்சியுடன் பயணிக்கச் செய்து வெற்றி பெற்றுள்ளது.

முதல் பாதியில் இருந்த ஒரு விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைவதைத் தடுக்க முடியவில்லை. சஸ்பென்ஸ் இல்லாத இரண்டாம் பாதி சற்றே தடுமாறச் செய்கிறது. எனினும் காதல், அதிரடி சண்டை என கலந்துகட்டி ஆடியிருக்கும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே தவற விடக்கூடாது விருந்து.

summary

Romance and Action: 'Spider-Man: Brand New Day' – Movie Review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments