20 கோடி பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி பாடல்..! இந்தியாவில் முதல் பாடல்!
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய முட்ட கலக்கி பாடல் நிகழ்த்திய சாதனை குறித்து...
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய முட்ட கலக்கி 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 2026ல் வெளியான பாடல்களில் முதல் பாடலாக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் கடந்த மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
Advertisement
Advertisement
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
இந்த நிலையில், இப்பாடல் யூடியூபில் 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இப்பாடலைக் கென் எழுதி, பாடியிருந்தார். இந்தியாவில் முதல்முறையாக ஒரு பாடல் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
முன்னதாக, ஜிவியின் கோல்டன் ஸ்பாரோ என்ற பாடலும் 200 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Mutta Chalki song crossed 20 crore views..! First song in India! G.V. Prakash Impresses!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.