நிறைவடைகிறது விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர்!
விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக...
நடிகர் விக்ராந்த் நடிக்கும் 'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடர் விரைவில் நிறைவடைகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் எல்பிடபிள்யூ இணையத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கி வருகிறார். ‘ஹார்ட்பீட்’ தொடரை தயாரித்த அட்லீ பேக்டரி நிறுவனம் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்த ஒருவர், சில பிரச்னைகள் காரணமாக தனது புகழை இழக்கிறார். பின்னர், அவரே ஒரு கிரிக்கெட் குழுவை உருவாக்கி பயிற்சியாளராக வென்றாரா? என்பதுதான் எல்பிடபுள்யூ தொடரின் கதை.
இந்த நிலையில், 'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த வார எபிசோடுகளுடன் இந்தத் தொடர் முடிகிறது.
'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர் முடிந்தவுடன், ஹார்ட் பீட் தொடரின் 3 ஆம் பாகம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் தெரியவந்துள்ளது.
The web series 'LBW – Love Beyond Wicket', starring actor Vikranth, is nearing its conclusion.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.