FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கெனிஷா பிரேக் அப்? ஆர்த்தியுடன் விவாகரத்து பெறும்வரை நடிக்க மாட்டேன் என ரவி மோகன் பேட்டி!

கெனிஷா - ரவி மோகன் - ஆர்த்தி பிரச்னை குறித்து...

ஆர்த்தி, கெனிஷாவுடன் ரவி மோகன். - கோப்புப் படங்கள்.
பகிர்:

நடிகர் ரவி மோகன் உடனான தனது காதலை முறித்துக் கொள்வதாக பாடகி கெனிஷா மறைமுகமாகக் கூறியதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

முன்னாள் மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும்வரை நான் நடிக்கப்போவதில்லை என்றும் பிள்ளைகளைப் பார்க்க விடுவதில்லை என்றும் ரவி மோகன் உறுக்கமாகப் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்திக்கு இடையே 2024 செப்டம்பரில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாதென நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement

சமீபத்தில் இருவரும் கோயிலுக்கு ஒன்றாகச் சென்றிருந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனால், மீண்டும் ஆர்த்தி - கெனிஷா தொடர்பான பேச்சு அதிகரிக்கவே பாடகி கெனிஷா இதற்குப் பதிலளித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டா பதிவில் கெனிஷா கூறியிருப்பதாவது:

இனிமேல் ரவி மோகனுக்காக தான் போராடப்போவதில்லை. நான் சென்னையை விட்டு வெளியேறுகிறேன். சமூக வலைதளம் வந்தாலே எதிர்மறையான கருத்துகள் என்னை மூழ்கடிக்கின்றன.

பெண்ணியம் வென்றது; மகிழ்ச்சி தோற்றது. நண்பர்கள், குடும்பத்தினர்கள், எனது நலம் விரும்புகள் என அனைவரும் எனக்குத் தேவைப்படும் தனியுரிமையை அளிக்க வேண்டும் எனக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் அளித்த பேட்டியில், “ எனது பிள்ளைகளைப் பார்க்க விடுவதில்லை. எப்போதும் பாதுகாவலர்களுடனே வருகிறார்கள். என்னை மிரட்டிதான் இந்தத் திருமணமே நடந்தது. அவர்கள் எனது பணத்தை வைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.

23 ஆண்டுகளாக இரவுப்பகலாக வேலை செய்திருக்கிறேன். எனது 95 சதவிகித படங்கள் வெற்றியடைந்துள்ளன. இதை நானே சொல்வதில் கவலையில்லை; இருந்தாலும் இதெல்லான் நான் கடினமாக உழைத்து சம்பாதித்தது.

இவ்வளவு ஆண்டுகள் அமைதியாக இருந்ததுதான் எனது தவறு. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருந்தேன். பெண்ணியம் பற்றி பேசுகிறார்கள்? பெண்ணியம் என்றால் என்ன? யாருக்காவது புரிகிறதா? பெண்களுக்கு ஆதரவாகவும் வன்முறைக்கு எதிராகவும் படம் எடுத்துள்ளேன். பெண்களின் உரிமைக்காக நின்றுள்ளேன். நான் எப்படி பெண்ணை புரிந்துகொள்ளாமல் இருப்பேன்? பேராண்மை படத்தில் வரும் எனது வசனத்தை இன்றும் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

இனிமேலும் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. முன்னாள் மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும்வரை நான் நடிக்கப்போவதில்லை” எனக் கூறியுள்ளார்.

summary

Kenisha and Ravi Mohan: A Breakup? Ravi Mohan states in an interview: "I will not act until the divorce is finalized!"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments