FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

யோவ், எங்க அப்பன் பட்ட தவிப்பு... ரசிகரின் பதிவுக்கு சேரன் பதில்!

இயக்குநர் சேரனின் பதிவு கவனம் பெற்று வருகிறது....

பகிர்:

இயக்குநர் சேரன் தவமாய் தவமிருந்து திரைப்படத்தைக் குறித்து பதிவிட்ட ரசிகருக்குப் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் சேரன் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தவமாய் தவமிருந்து. நாயகனாக சேரனும் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சரண்யா உள்ளிட்டோர் நடித்த இப்படம் ஆத்மார்த்தமான வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் நீங்காத நினைவுகள் கொண்ட திரைப்படமானது. படத்தில் இடம்பெற்ற சபேஷ் - முரளியின் பாடல்கள் மிக உணர்வுப்பூர்வமாக இன்று கேட்கப்படும் பாடல்களாக இருக்கின்றன.

இப்படத்தில் தன் மகன்களுக்கு தீபாவளி புத்தாடைகளையும் பட்டாசுகளையும் வாங்க இரவெல்லாம் பணியாற்றி அசதியில் ராஜ்கிரண் படுத்திருக்கும் காட்சி உள்ளது. இதனை ஒவ்வொரு தீபாவளியன்றும் பகிரும் ரசிகர்கள், தங்களின் தந்தைகளை நினைவுபடுத்தும்படி இருப்பதாக அவரவர் நினைவுகளை எழுதுவார்கள். அப்படி, இந்த முறை ரசிகர் ஒருவர், “யோவ் ஏன் யா இப்டி ஒரு படம் எடுத்த? என்னால முடியல அழுகையா வருது எங்க அப்பன் பட்ட தவிப்பு என் கண்ணுக்குள்ளயே இருக்கு.. அப்பா இல்ல சார் . உங்களுக்கு என் அன்பு நன்றி” என சேரனைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

Advertisement

Advertisement

இதனைக் கண்ட இயக்குநர் சேரன், “ ‘யோவ்' இந்த உரிமை இந்த படம் கொடுத்தது.. அந்த படத்தின் உணர்வுகள் கொடுத்தது... நம் வாழ்க்கையை நம்மைப்போல ஒரு சகோதரன் பதிவு செய்திருக்கிறான் என்ற பெருமையில் சொன்ன வார்த்தை... இந்த உரிமையும், இந்த வார்த்தையும் எத்தனை இயக்குநருக்கு கிடைக்கும் .. கிடைத்திருக்கும்.. வணங்குகிறேன் மக்களே... இந்த அன்புதான் யாராலும் வாங்க முடியாத, கொடுக்க முடியாத ஆஸ்கார் .. எம்மி விருதுகள்... எம் மக்களை என்றும் போற்றுவேன்..” எனப் பதிவிட்டுள்ளார். இப்பதிவிலும் நிறைய பேர் தங்கள் தந்தைகளின் தீபாவளி நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Director Cheran has responded to a fan who posted about the film Thavamai Thavamirundhu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.