FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காதலரைத் திருமணம் செய்தார் பிரியா பவானி சங்கர்!

திருமணம் செய்த பிரியா பவானி சங்கர்....

பிரியா பவானி சங்கர் தன் திருமணத்தில்.
பகிர்:

நடிகை பிரியா பவானி சங்கர் தன் காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.

நடிகை பிரியா பவானி சங்கர் தொகுப்பாளினியாகப் பணியாற்றி பின் சினிமாவுக்குள் வந்தவர். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், பத்து துல, டிமான்டி காலனி - 2 ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். இடையே, சில தோல்விப்படங்களையும் கொடுத்தார்.

Advertisement

Advertisement

இறுதியாக, நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த இருமுடி கட்டு திரைப்படம் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது. இப்படத்தில் ரவி தேஜாவுக்கு மனைவியாகவும் பெண் குழந்தைக்கும் அம்மாவாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தன் நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் என்பவரைப் பிரியா பவானி சங்கர் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்துகொண்டார். இதன் புகைப்படங்கள், விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Actress Priya Bhavani Shankar married her boyfriend.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.