FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிடிஎஃப் வாசனை ரெட் கார்டு வாங்க வைக்க வேண்டும்! முகேஷிடம் ஜேசன் கூறிய ரகசியம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததற்கான காரணத்தை முகேஷிடம் ரகசியமாக ஜேசன் கூறியது குறித்து...

31 வினாடிகள் முன்பு
முத்தழகி; உள்படம் - முகேஷிடம் ரகசியம் கூறும் ஜேசன் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறிய பிறகு அதற்கான காரணமாக முகேஷின் காதில் ஜேசன் கூறியது என்ன என்பது குறித்து முத்தழகி தெரிவித்துள்ளர்.

டிடிஎஃப் வாசனை தூண்டிவிட்டு ரெட் கார்டு வாங்க வைக்க வேண்டும் என ஜேசன் திட்டமிட்டிருந்ததாகவும், இத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்திலேயே டிடிஎஃப் வாசனை அடிக்கச் சென்றதாகவும் முகேஷின் காதில் ஜேசன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

அருகில் நின்றிருந்த முத்தழகிக்கு இந்த தகவல் கேட்டதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முத்தழகி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 11வது வாரத்தை எட்டியுள்ளது. குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரத்தின் இறுதியில் முத்தழகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிக் பாஸில் தான் சந்தித்த சவால்கள் குறித்தும் அனுபவங்கள் குறித்தும் நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் முகேஷிடம் ஜேசன் கூறிய ரகசியம் குறித்துப் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: டிடிஎஃப் வாசன் சீக்கிரமாகவே கோபமடையும் சுபாவம் உடையவர். அவரை தூண்டிவிட்டால் ஒரு கார்டு (ரெட் கார்டு) வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜேசன் செயல்பட்டுள்ளார். டிடிஎஃப் வாசன் எதேர்ச்சையாகவே கையசைக்கும்போது ஜேசனின் மூக்கில் விரல் பட்டுவிட்டது. அதற்காக தன்னை தாக்கியதாகக் கூறிக்கொண்டு வாசனை அடிக்கச் சென்றார் ஜேசன். இது வார இறுதியிலும் கண்டிக்கப்பட்டது.

டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்க திட்டமிட்டதை நடத்தவில்லை; அதோடு மட்டுமின்றி அது வேண்டுமென்றே செய்தது அம்பலமாகிவிட்டதால் பிக்பாஸில் இருந்து வெளியேறும் முடிவை அவர் எடுத்துள்ளார் என முத்தழகி குறிப்பிட்டார்.

summary

TTF Vasan must be made to get a red card! The secret Jason shared with Mukesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.