ஜான்வி கபூர்... இதுவும் குற்றம்தான்... கவனம் பெற்ற ராம் கோபால் வர்மா!
சுட்டமல்லி பாடலின் ஏஐ உருவாக்கம் குறித்து ராம் கோபால் வர்மா..
இயக்குநர் ராம் கோபால் வர்மா சுட்டமல்லி ஏஐ விடியோ குறித்து கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவான தேவரா திரைப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற சுட்டமல்லி பாடல் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று ஹிட் அடித்தது. அப்பாடலில் நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சியாக நடன அசைவுகளைக் கொடுத்திருப்பார்.
இப்பாடலை ஏஐ மூலம் போலியாக சித்திரித்து உண்மையான பாடலில் இடம்பெறாத மோசமான ஆபாச காட்சிகளை உருவாக்கி சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், ஜூனியர் என்டிஆர் அதனை செய்தவர்களைச் சும்மா விடமாட்டேன் என எச்சரித்து பதிவொன்றை வெளியிட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா, “இந்த விவகாரத்தில் அனைத்து பிரபலங்களும் சாதித்த ஒரே விஷயம் என்னவென்றால், அந்த ஆட்சேபனைக்குரிய லிங்கை பரவலாகப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் கோடிக்கணக்கான மக்களை அதைப் பார்க்க வைத்ததுதான். அதற்குப் பதிலாக, அந்தக் குற்றத்தைச் செய்த நபரைப் பிடிப்பதில் கவனம் செலுத்தி, அவர் கைது செய்யப்பட்டதைப் பற்றிப் பொதுவெளியில் தெரிவித்திருந்தால் அதுதான் சரியான அணுகுமுறையாக இருந்திருக்கும்.
ஆனால், அவர்கள் ட்வீட் மூலம், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்துக்கும் அந்த ஏஐ உருவாக்கத்திற்கு அளவுக்கு அதிகமான கவனத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுவும் குற்றம்தான்.” எனத் தெரிவித்துள்ளார்.
Director Ram Gopal Varma has shared his views on the chuttemalle AI video.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.