பிந்தாஸ்... இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு பதிலளிக்கும் நோரா ஃபதேகி!
நோரா ஃபதேகியின் நடனம் ரீல்ஸ்களாகி வருகின்றன...
ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காகக் கிடைத்து வரும் பாராட்டுகளுக்கு நோரா ஃபதேகி பதிலளித்து வருகிறார்.
ஜெயிலர் - 2 திரைப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்ததால் திரைகளும் காட்சிகளும் அதிகரித்தன. மேலும், சில மணிநேரங்களில் லட்சக் கணக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்ட சாதனையும் நிகழ்ந்தது.
நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
ஆச்சரியமாக, இப்படம் கடந்த 5 நாள்களிலேயே ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல திரையரங்க உரிமையாளர்களும் டிக்கெட்கள் அதிக அளவில் கேட்கப்பட்டு வருவதாகவும் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிந்தாஸ் பாடலும் திரையரங்க வெளியீட்டுக்குப் பின் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. இப்பாடலின் வரிகளுக்கு ஏற்ப நடிகை நோரா ஃபதேகியும் நடனப்பெண்களும் ஆடும் காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது.
தற்போது, பலரும் நோரா ஃபதேகியின் நடன அசைவுகளை நகல் செய்து இன்ஸ்டாகிராமில் விதவிதமாக ரீல்ஸ்களை செய்து வருகின்றனர். இதனைக் கண்ட நோராவும் ஒவ்வொரு பதிவுக்கும் பதிலளித்து வருகிறார்.
நோரா ஃபதேகி இதற்கு முன் தம்மா திரைப்படத்தில் தில்பர் கி ஆன்கோன் கா (Dilbar Ki Aankhon Ka) என்கிற பாடலுக்கு சிறப்பு நடனமாடியிருந்தார். இப்பாடலும் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Nehra Fatehi is responding to the praise she has been receiving for the film Jailer - 2.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.