FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிமான்டி காலனி - 3 வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

டிமான்டி காலனி - 3 வெளியீடு குறித்து...

2 செப்டம்பர் 2026, 11:20 am IST
பகிர்:

டிமான்டி காலனி - 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி - 3 திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

மேலும், இதுவே அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான முதல் தமிழ் ஹாரர் திரைப்படம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிமான்டி காலனி - 3 திரைப்படம் வருகிற செப். 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய தகவலின்படி சில காரணங்களால் இப்படத்தை அக். 1 ஆம் தேதி வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Reports indicate that there will be a change in the release date of the movie Demonte Colony 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments