எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்: ரஜினியின் வாழ்த்து பற்றி சூரி நெகிழ்ச்சி!
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் செப். 10 ஆம் அன்று திரையரங்குகளில் வெளியானது.
மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில் நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், சுஹாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
படம் நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அதிக வசூலையும் குவித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து மண்டாடி திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 4.70 கோடி வசூல் செய்தது.
அதேபோல, உலகம் முழுவதும் 3 நாள்களில் ரூ. 30 கோடி வரை வசூலித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
சூரி கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இப்படம் அதிக வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சூரியின் நடிப்புக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சூரியை போனில் வாழ்த்தியதாக அவர் பதிவிட்டுள்ளார்.
சூரியின் சமூக ஊடகப் பதிவில், ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மண்டாடி படத்தைப் பார்த்து ரசிததுள்ளார். அவரது மனமார போனில் அழைத்து வாழ்த்தியது எனக்கும் எங்கள் படக்குழுவிற்கும் மிகமுக்கியமானது. மறுமுனையில் அவரது குரலைக் கேட்ட அந்த விலைமதிப்பற்ற தருணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்” எனக் குறிப்பிட்டு அவரது படத்தைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ”அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Actor Rajinikanth called actor Soori and congratulated him after watching his film Mandaadi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.