வீட்டை அடமானம் வைத்து... உருக்கமாக பேசிய அசோக் செல்வன்!
நடிகர் அசோக் செல்வன் பேச்சு கவனம் பெற்றுள்ளது...
நடிகர் அசோக் செல்வன் அன்பில் அவன் திரைப்படத்திற்காக ஏற்பட்ட நெருக்கடியைப் பகிர்ந்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் ‘அன்பில் அவன்’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பால அசோக் செல்வனின் சகோதிரி தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவான இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வில் பேசிய நடிகர் அசோக் செல்வன், “அன்பில் அவன் திரைப்படத்திற்காக முதலில் என் பெற்றோருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். நிறைய காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் இப்படத்திற்கு ஒருகட்டத்தில் மேலும் நிதி தேவைப்பட்டது. அப்போது, என் அப்பா - அம்மா வீட்டின் பத்திரத்தை அடகு வைத்தோம். என் கனவுக்கு எப்போதும் இருவரும் உதவிக்கொண்டே இருக்கிறார்கள். என் பெற்றோர் அளவுக்கு யாரும் இல்லை” என உருக்கமாகப் பேசினார்.
Actor Ashok Selvan has shared details about the crisis he faced during the making of the film Anbil Avan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.