ஏழுகடல் ஏழுமலை திரைப்படத்தின் முதல் 4 நிமிடங்கள் வெளியீடு!
ஏழுகடல் ஏழுமலை திரைப்படத்தின் முதல் காட்சி வெளியீடு...
இயக்குநர் ராம் இயக்கிய ஏழுகடல் ஏழுமலை திரைப்படத்தின் முதல் 4 நிமிடங்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி, சூரிய் நடிப்பில் உருவான திரைப்படம் ஏழுகடல் ஏழுமலை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியீட்டுக்குத் தயாரானாலும் வணிக காரணங்களால் வெளியீட்டைச் சந்திக்காமல் இருந்தது.
ஆனால், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று வெளிநாட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. தற்போது, இப்படம் நாளை (அக். 1) திரையரங்குகளில் வெளியாகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் முதல் 4 நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளனர். ரயில் பெட்டிக்குள் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் சூரி கதாபாத்திரங்களுக்கு இடையேயான கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
The first four minutes of the film yezhu Kadal yezhu Malai, directed by Ram, have been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.