FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தலைமுடிக் கொள்ளை ரசிகர்களை ஈர்க்குமா? பிளாக் கோல்ட் திரைவிமர்சனம்

தலைமுடி ஏற்றுமதியை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் பிளாக் கோல்ட் திரைப்படம் எப்படி இருக்கிறது?

14 நவம்பர் 2026, 1:01 pm
பகிர்:

இயக்குநர் தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் வெற்றி, ப்ரியாலயா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ள இத்திரைப்படத்தை எம் எம் ஸ்டுடியோஸ் மூர்த்தி தயாரித்துள்ளார்.

சென்னையில் ஒரு கார் கம்பெனியில் முதன்மை மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் நாயகன் வெற்றி. அவரது தந்தை லிவிங்ஸ்டன் தலைமுடி ஏற்றுமதி நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் ஒருநாள் முக்கியமான வேலை என லாரியை எடுத்துச் செல்லும் லிவிங்ஸ்டன் வாகனத்துடன் காணாமல் போகிறார். அவர் எங்கே போனார்? லாரியும், அதில் இருந்த முக்கியமான பொருள் என்ன ஆனது? என்பதுமே பிளாக் கோல்ட் திரைப்படத்தின் கதை.

Advertisement

Advertisement

ஜிவி, எட்டு தோட்டாக்கள், ராஜபுத்திரன், வனம் உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்திருக்கிறார் நடிகர் வெற்றி. காதலன், தந்தைக்காக காவலரை அடிக்கும் மகன், போலீசை மீறி தேடுதல் வேட்டையில் ஈடுபடும் கதாநாயகன் என நடிப்பதற்கான பல அம்சங்கள் கொண்ட கதைக்களத்தில் அவரின் நடிப்பு முந்தையை படங்களின் சாயலையே பிரதிபலிக்கின்றன. தந்தை, மகன் இடையேயான பாசப் பிணைப்பே படத்திற்கான அச்சாரம் எனும் நிலையில் அது சரிவர பார்வையாளர்களுக்கு கடத்தப்படாதது பலவீனமான அம்சம். லிவிங்ஸ்டனின் நடிப்பு யதார்த்தமாக இருந்தாலும் தனியே அவருடைய நடிப்பு மட்டும் படத்தை கை தூக்கி விட முடியாமல் உள்ளது. நாயகி ப்ரியாலயா முதல் பாதியில் அழகாக வருகிறார். அதன்பிறகு காணாமல் போகிறார். அவர் எதற்கு வந்தார் எனும் கேள்வி பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது.

இதைக் கடந்து வெங்கடேஷ், ராமர், அருள் சங்கர், சபிதா ராய் என பலர் நடித்துள்ளனர். காவல் அதிகாரியான அபிராமி வழக்கம் போல எல்லாம் நடந்துமுடிந்த பிறகு கடைசியாக வருகிறார்.

கோவில்களில் காணிக்கையாகக் கிடைக்கும் தலைமுடி மேலை நாடுகளில் முக்கியமான பொருள் என விரியும் திரைப்படத்தில் வில்லத்தனங்கள் எடுபடவில்லை. நகைக்கொள்ளையில் ஈடுபடும் வில்லன்கள் செளரி முடி கொடுக்கும் ரூ. 1500க்காக இலக்கை மாற்றுவதெல்லாம் அதீத நம்பிக்கை கொண்ட காட்சிகள். படத்திற்கு ஆறுதலாக அமைந்திருப்பது சந்தோஷ் குமாரின் கேமரா பணிகள். இசையும், வசனங்களும் ஓகே ரகம்.

வலுவான திரைக்கதை இல்லாத பிளாக் கோல்ட் ரசிகர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.