வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய வானிலை ஆய்வுத் துறையில் அமைச்சகம் சாராத அரசிதழ் அல்லாத (பதிவுறா) குரூப் ‘பி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையில் அமைச்சகம் சாராத அரசிதழ் அல்லாத (பதிவுறா) குரூப் ‘பி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientific Assistant
மொத்த காலியிடங்கள்: 900
Advertisement
Advertisement
தகுதி: இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18.10.2022 தேதியின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.10.2022
மேலும் விவரங்கள் அறிய https://bit.ly/3SRLjxI என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.