ஜிப்மரில் 80 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் 80 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் 80 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி திண்டிவனம் சாலை கோரிமேடு பகுதியில் மத்திய அரசு மருத்துவ நிறுவனமான ஜிப்மா் அமைந்துள்ளது. இங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுவை, தமிழகப் பகுதி மக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
இதற்கு காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கிளை நிறுவனமும் உள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்கள் 26 போ், உதவி பேராசிரியா்கள் 35, காரைக்கால் ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்கள் 2, உதவி பேராசிரியா்கள் 17 என மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பா் 21-ஆம் தேதி மாலை 4.30 மணி வரையில் ஜிப்மா் இணையதளத்தில் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்களுக்கான கல்வித் தகுதி, ஊதிய விவரம், பணி அனுபவம், வயது, கட்டணம் ஆகிய விவரங்களை ஜிப்மா் இணையதளத்தில் பாா்வையிடலாம் என இயக்குநா் ராகேஷ் அகா்வால் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.