FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் 3,131 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி..?

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புப்புவதற்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2025 எழுத்துத் தேர்வு

Updated On : 29 ஜூன் 2025, 4:19 pm IST
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)
பகிர்:

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புப்புவதற்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2025 எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஜூலை 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விவரங்களை பார்ப்போம்:

பணி: Lower Division Clerk (LDC), Secretariat Assistant (JSA)

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

பணி: Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

பணி: Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

காலியிடங்கள் : 3,131

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

அதாவது 2 ஜனவரி 1999-க்கு முன்போ 1 ஜனவரி 2008-க்குப் பின்போ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. அரசு அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படுமும் முறை: இரண்டு கட்ட கணினி வழித் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்கட்டத் தேர்வு நடைபெறும் தேதி: 8.9.2025 18.9.2025, இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறும் தேதி பிப்ரவரி-மார்ச் (2026)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.7.2025

மேலும் விவரங்கள் அறியங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments