முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.40,000 சம்பளத்தில் இர்கான் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம்

Updated On : 3 மே 2025, 12:48 pm IST
பகிர்:

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் 2023-2024 ஆம் ஆண்டில் 12,387 கோடிக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்துள்ளது.

பல ஆண்டுகளாக மலேசியா, அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவிலான ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: C-08/2025

பணி: Senior Works Engineer

காலியிடங்கள்: 8

வயது வரம்பு: 1.4.2025 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000

தகுதி: பொறியியல் துறையில் Electrical &Electronics, Electronics & Communication, Electronics & Instrumentation ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Joint General Manager, HRM, IRCON International Limited, C-4, District Centre, Saket, New Delhi - 110 017.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 5.5.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.