FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மாநில அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு குறித்து...

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் விழுப்புரம், சென்னை, சேலம், மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி மாவட்ட பணிமனைகளில் பட்டதாரிப் பயிற்சியாளர்கள் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத), பொறியியல் பட்டயப் படிப்பு (தொழில்நுட்ப வல்லுநர்) தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பாடப் பிரிவுகளில் டிப்ளமோ, பட்டப்படிப்பை முடித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரம் வருமாறு:

பயிற்சியின் பெயர்: GraduateApprentice (Engineering)

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 438

உதவித்தொகை: மாதம் ரூ.12,300

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice (Non - Engineering)

காலியிடங்கள்: 623

உதவித்தொகை: மாதம் ரூ.12,300

தகுதி: கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Diploma Apprentice (Technician Apprentice)

காலியிடங்கள்: 457

உதவித்தொகை: மாதம் ரூ.10,900

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2022, 2023, 2024, 2025, 2026- ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேர்முகத்தேர்வு செப்டம்பர் நான்காவது வாரம் தொடங்கும். நேர்முகத்தேர்வின்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: TNSTC, Trichy, Region Office.

விண்ணப்பிக்கும் முறை: www.natucation.gov.in இணையதளத்தில் ஆன்லைன் முறையில் தங்களுடைய தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தால் வழங்கப்படும் Unique Enrolment Number-ஐ பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Top Down Button-ஐ கிளிக் செய்து அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை தேர்வு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

The Taminadu State Transport Corporation Ltd has officially announced a massive 2026 recruitment Notification to fill 1518 Graduate Apprentices (Engineering and Non Engineering), Diploma in Engineering (Technician) Apprentices vacancies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments