FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அலுவலக உதவியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

21 வினாடிகள் முன்பு
கொச்சி கப்பல் கட்டும் தொழிற்சாலை - CSL
பகிர்:

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்' நிறுவனம். கர்நாடக மாநிலம் மால்பேயில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் இந்திய குடிமக்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: UCSL/IMS/HR/VN/F/11- OA/MAT/HR/95

பணி: Office Assistant

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 4

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.25,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.25,510, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.26,040, நான்காம் ஆண்டு மாதம் ரூ.26,590, ஐந்தாம் ஆண்டு மாதம் ரூ.27,150 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 26.8.2026 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Apply Online...Udupi CSL Recruitment 2026 Office Assistant Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments