முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

Updated On : 1 ஜூலை 2026, 12:47 pm IST
மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி - Mazagon Dock Limited
பகிர்:

மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான 8, 10, ஐடிஐ முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும்.

அறிவிப்பு எண்: MDL/ATS/01/2026

பயிற்சியின் பெயர்: Trade Apprentice - Group - A

Advertisement

Advertisement

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 முதல் 19-க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Trade Apprentice - Group - B

பயிற்சி காலம்: 1 ஆண்டு

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 16 முதல் 21-க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Trade Apprentice - Group - C

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் 50 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 1.10.2026 தேதியின்படி 14 முதல் 18-க்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்விற்கு அழைக்கப்படுபவர்களின் விபரம் 10.7.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டை இணையதளத்திலிருந்து 15.7.2026 ஆம் தேதி பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளவும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 25.7.2026

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mazagondock.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.7.2026

Today is the last day to apply for apprentice training at Mazagon Dock Shipbuilders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments