இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் டிரெய்னி பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்பது அணுசக்தி சுழற்சியில் ஒரு சிறப்பு முன்னணி இடத்தைப் பெற்றுள்ள ஒரு மத்திய பொது எரிசக்தி நிறுவனமாகும். இது கனநீர் அணு உலைகளுக்கான யுரேனியத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: UCIL-10-2026
Advertisement
Advertisement
பணி: Graduate Operational Trainee (CR & D)
காலியிடங்கள்: 4
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வேதியியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: மாதம் ரூ.29,990
வயது வரம்பு: 23.5.2026 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு , டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.uraniumcorp.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
UCIL invites applications from young, energetic and dynamic persons for recruitment for the following post THROUGH ONLINE APPLICATION MODE...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.