FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெல் நிறுவனத்தில் 660 காலிப்பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெல் நிறுவனத்தில் 660 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

பெல் நிறுவனத்தில் 660 காலிப்பணியிடங்கள் - BHEL
பகிர்:

1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் பாரத மிகு மின் நிறுவனம்(பெல்). இந்த நிறுவனம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மின் ஆற்றலை வழங்குவதில் முன்னிலை வகிப்பதுடன் தேசத்தைக் கட்டமைப்பதில் ஒரு நம்பகமான பங்களிப்போடு மூலதனப் பொருள்கள் துறையில் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மேலும் 15 உற்பத்தி நிலையங்கள், 8 சேவை மையங்கள், 15 பிராந்திய சந்தைப்படுத்தல் மையங்கள், 4 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 2 பழுதுபார்ப்பு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகின்றன.

உலகத்தரம் வாய்ந்த பொறியியல், உற்பத்தி, திட்டச் செயலாக்க நிபுணத்துவம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவுடன் மின்சாரம், போக்குவரத்து, பாதுகாப்பு, விண்வெளி, எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் செயல்முறைத் தொழில்கள் (உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை செய்து வருகிறது. குறிப்பாக, அனல், நீர்மின், எரிவாயு, அணுசக்தி மற்றும் சூரிய ஆற்றல் ஆகிய பிரிவுகளில் நாட்டின் மின் உற்பத்தித் திறனுக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது பெல் நிறுவனம்.

இந்த நிறுவனம் உலகின் 6 கண்டங்களிலும், 95 நாடுகளிலும் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தன்னிறைவு இலக்குகளை அடைவதில் பெல் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.

Advertisement

Advertisement

தற்போது, ​​நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக ரூ. 2.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது; இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், வருவாய் ஈட்டுவதற்கான வலுவான வாய்ப்புகளையும் உறுதிப்படுத்துகிறது.

திறமையான இளைஞர்களுக்கு மின்சாரம், தொழில் துறை, மின் கடத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து, எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளில் தேசத்தைக் கட்டமைப்பதற்கான சவாலான மற்றும் பலனளிக்கக்கூடிய பணி வாய்ப்புகளை பெல் வழங்கி வருகிறது.

அந்த வகையில், இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 660 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் நவ.11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பார்ப்போம்...

மொத்த காலியிடங்கள்: 660

பணி: பிட்டர்- 278

பணி: வெல்டர்- 104

பணி: டர்னர்- 52

பணி: மெஷினிஸ்ட்- 101

பணி: எலக்ட்ரீஷியன்- 90

பணி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக் -23

பணி: பவுண்டரிமேன்-12

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (என்.ஏ.சி) பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.10.2026 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்கு வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். பணி அனுபவ ம் அடிப்படையில் 7 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல்கட்டமாக ஒரு ஆண்டுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். வெற்றிகரமாக அதனை நிறைவு செய்த பின்னர் முழு நேர பணியாளராக பணியமர்த்தப்படுவர். இதன் அடிப்படையில் பயிற்சி காலத்தில் மாதம் ரூ.24,000 சம்பளமாக வழங்கப்படும். பின்னர், மாதம் ரூ.29,500 முதல் ரூ.65,000 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம்: தமிழ்நாட்டில் பாய்லர் துணை உபகரண ஆலை-ராணிப்பேட்டை, உயர் அழுத்த பாய்லர் ஆலை-திருச்சி மற்றும் மின்னணு பிரிவு, சூரிய ஆற்றல் வணிகப் பிரிவு-பெங்களூரு, கனரக மின் உற்பத்தி உபகரண ஆலை - ஹைதராபாத், தெலங்கானா, கனரக தகடு மற்றும் கலன் ஆலை - விசாகப்பட்டினம், கனரக மின் உபகரண ஆலை - ஹரித்வார், உத்தரகண்ட், கனரக மின் ஆலை - போபால், மத்தியப் பிரதேசம், மின்மாற்றி ஆலை - ஜான்சி, உத்தரப்பிரதேசம் உள்பட 9 இடங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தற்காலிகமாக 11.12.2026 என திட்டமிடப்பட்டுள்ளது

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி ரூ.472. இதர அனைத்து பிரிவினர் ரூ.1,072 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.11.2026.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

BHARAT HEAVY ELECTRICALS LIMITED ARTISAN RECRUITMENT - 2027

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments