FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தெற்கு ரயில்வேயில் 4,023 தொழில்பழகுநர் பயிற்சி இடங்கள்: 10, ஐடிஐ, +2 முடிதவர்களுக்கு வாய்ப்பு!

தெற்கு ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே பணிமனைகளில் அளிக்கப்படும் தொழில்பழகுநர் பயிற்சி குறித்து....

23 செப்டம்பர் 2026, 1:13 pm IST
தெற்கு ரயில்வேயில் 4,023 தொழில்பழகுநர் பயிற்சி - தெற்கு ரயில்வே
பகிர்:

தெற்கு ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் சென்னை, பெரம்பூர், கோயம்புத்தூர், சேலம், அரக்கோணம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய இடங்களிலுள்ள ரயில்வே பணிமனைகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான(அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இதுகுறித்த விபரம் வருமாறு...

அறிவிப்பு எண்.: 01/2026

Advertisement

Advertisement

பயிற்சி: Trade Apprentice(Fresher/Ex-ITI)

மொத்த காலியிடங்கள்: 4032

பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள் விபரம் வருமாறு:

Fitter, Welder, Painter, MLT, MMV, MMTM, COPA, PASAA, Electrician, Carpenter, Machinist,GAS Cutter, Civil Draughtsman,Diesel Mechanic,Plumber

தகுதி:

1. 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

2.Fresher(Non-ITI)-க்கு பிரிவுக்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்டி பிரிவிற்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் அறிவியல், கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27.9.2026 தேதியின்படி, Ex.ITI பிரிவிற்கு 15 முதல் 24-க்குள்ளும், Non-ITI பிரிவிற்கு 15 முதல் 22-க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 10 ஆம் வகுப்பு, +2, ஐடிஐ படிப் பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சிக்குதேர்வு செய்யப்படுபவர்களில் Fresher Category எனில் Welder டிரேடுக்கு 15 மாதங்களும், எம்எல்டி பிரிவிற்கு 15 மாதங்கள், Fitter,Painter இரண்டு ஆண்டுகளும் பயிற்சி வழங்கப்படும். Ex-ITI பிரிவிற்கு 1 ஆண்டும் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியின்போது வழங்கப்படும் உதவித்தொகை (மாதம்)

1. Freshers மாதம் ரூ.8200

2. MLT மாதம் ரூ.9600

3. Ex-ITI மாதம் ரூ.9600 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். டிரேடு வாரியாக காலியிட விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

ONLINE applications are invited from eligible candidates for engagement as...

A

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments